கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள ஆய்வு மாநாடு

கிழக்குப் பல்கலைககழகமானது வவுனியா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை வேலூர் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றோடு இணைந்து நடத்தும் ஆய்வு மாநாடு எதிர்வரும் 13ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இவ் ஊடக சந்திப்பில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், மாநாட்டு இணைப்பாளரும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் சி.சந்திரசேகரம், பாண்டிச்சேரி பல்கலைக்கழக சர்வதேச கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் குமரேசன் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ் ஊடக சந்திப்பில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், மாநாட்டு இணைப்பாளரும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் சி.சந்திரசேகரம் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்