காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் மரவள்ளி கிழங்கு அவியல்

போராட்டத்துக்கு வருவோருக்கு நேற்றையதினம் தண்ணீர் போத்தல்கள் தன்னார்வ தொண்டர்களினால் வழங்கப்பட்டன. இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சுடசுட தேனீர் மற்றும் மரவள்ளி கிழங்கு அவியல், தன்னார்வ தொண்டர்களினால் வழங்கப்படுகின்றது.

அரசாங்கத்துக்கு எதிராக நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு, பழைய பாராளுமன்ற கட்டடத்துக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் (கோல்பேஸ்) ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் இன்னும் தொடர்கின்றது.

விடியவிடிய முன்னெடுக்கப்பட்ட போராட்டம் விடிந்தும் தொடர்ந்தது. அவர்களுடன் மேலும் சிலர், தங்களையும் காலையிலும், பிற்பகலிலும் இணைத்துக்கொண்டனர். இதனால், காலிமுகத்திடலின் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

சீரற்ற வானிலையையும் கடும் மழையையும் பொருட்படுத்தாது, போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.