காலி முகத்திடலில் பொலிஸ் பாரவூர்திகள்?

காலி முகத்திடல் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

இன்று சனிக்கிழமை காலை காலிமுகத்திடலுக்கு அருகாமையில் பொலிஸ் பாரவூர்தி வாகனங்கள்  பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இவை எங்கிருந்து? எதற்காக? இவ்விடத்தில் நிறுத்தப்பட்டன என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படிருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அவை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.