கார் விபத்து: 5 பேர் பலி
இந்தியாவின் மத்திய பிரதேச பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காரில் பயணித்தவர்கள், பிறந்தநாள் வீடொன்றுக்கு சென்று மீள திரும்பிக்கொண்டிருக்கும் பொழுது குறித்த பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த மரத்துடன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்ததுடன் இது தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.