கார் பள்ளத்தில் விழுந்ததில் அவுஸ்திரேலிய பெண் பலி
கம்பளை ஹெம்மாத்தகம தாரா வங்குவ என்ற இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த 67 வயதுடைய சுற்றுலாப் பயணி என்பதுடன் காயமடைந்தவர்கள் மரணித்த அவுஸ்திரேலிய பிரஜையின் மகளும்இ காரின் சாரதியும் என தெரியவந்துள்ளது.
மேலும் காரின் சாரதி, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தூக்க கலக்கத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்