கார்கிவ் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்

யுக்ரைனின் கார்கிவ் நகரில், ரஷ்யா மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

கார்கிவ் நகர் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நகரத்தின் ஆளுநர் ஒலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மீட்பு பணியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுக்கு வருகைத்தந்த பின்னரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்கிவ் நகரில் இன்று அதிகாலை 4 தடவைகள் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள், பாரியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.