காத்தான்குடி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு : மத்ரஸா நிர்வாகி பொலிஸ் தடுப்பு காவலில்

 

காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட மத்ரஸா எனும் பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின் விசாரணைக்கு பின்னர் குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிட்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதான குர்ஆன் மத்ரஸா நிர்வாகி  சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் புலன் விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

“குடும்பத்தில் மூத்தவரனான தனது மகன் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி குறித்த மத்ரஸாவில் இணைந்ததாகவும்,  அவருக்கு மாதம் ஒருமுறை 10 ஆயிரம் செலுத்தியதாகவும், இணைப்பு கட்டணமாக ரூபா 25 ஆயிரம் செலுத்தியதாகவும், 2 மாதம் கூட இன்னும் ஆகவில்லை மௌலவியின் தொலைபேசி ஊடாக மகனின் சடலத்தை கண்டதாகவும்” கண்ணீர் மல்க சிறுவனின் தந்தை  தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

காத்தான்குடி சிறுவன் சடலமாக மீட்பு ?

காத்தான்குடி சிறுவன் மதரஸாவில் சடலமாக மீட்பு : நிர்வாகி பொலிஸாரால் கைது