காதலனுடன் வாழ ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த மாணவி

காதலனை திருமணம் செய்தவற்காக மூதாட்டி ஒருவரை கொன்று அவரின் நகைகளை அபகரித்த 17 வயதே ஆன மாணவியை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோவை – பொள்ளாச்சியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒன்றரை வருடங்களாக காதலித்து வரும் நபரை திருமணம் செய்வதற்காகவே மூதாட்டியை கொன்று நகைகளை அபகரித்ததாக அந்த மாணவி பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அயல் வீட்டில் வசித்து வந்த மூதாட்டியிடம் நிறைய நகைகள் இருந்ததால் அவரின் நகைகளை அபகரிக்க ஆசைப்பட்டதாகவும், இந்நிலையிலேயே அவரைக் கொலை செய்ய நேர்ந்ததாகவும் காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு இரு மாதங்களாக திட்டமிட்டு இந்தக் கொலையை செய்ததாக மாணவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்