காணவில்லை : கண்டுபிடிக்க உதவுங்கள்

28 வயதுடைய நபர் ஒருவரை காணவில்லை என கடந்த நவம்பர் 13 ம் திகதி அட்டாம்பிடிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும்  உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நெளுவ தோட்டம் பண்டாரவளை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய  முத்தையா ஜொனி பெர்னாண்டோ என்ற நபரே காணாமல் போயுள்ளதாகவும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கீழே புகைப்படத்தில் காணப்படும் நபர் எங்கேயும் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.