Last updated on February 3rd, 2025 at 12:09 pm

காட்டு யானைகளின் பிரச்சினைக்கு புதிய தீர்வு | Minnal 24 News %

காட்டு யானைகளின் பிரச்சினைக்கு புதிய தீர்வு

காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வாக தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வேலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம பகுதியில் இந்த புதிய மின்சார வேலி வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்துடன், குறைந்த செலவில் இந்த மின்சார வேலி, உள்நாட்டு பொறியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்சார வேலி, எந்த நேரத்தில், உடைந்தாலும், அது கைபேசி செயலி ஒன்றின் ஊடாக குறுஞ்செய்தியாக அறியப்படுத்தும் வசதியை கொண்டுள்ளதாகவும் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24