காட்டுக்கு தீ வைப்த்த விசமிகள்

ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்ட பகுதிக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள நீர்காப்பு காட்டுப்பகுதிக்கு நேற்று செவ்வாய் கிழமை வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளன.

இதனால் ஹட்டன் மல்லிகைப்பூ தோட்டப்பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீ வைப்பு காணிகளை துப்பறவு செய்வதற்காகவும் காணிகளை ஆக்கிரமிப்பதற்காகவும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.