காசா மீது இஸ்ரேல் தாக்குதல் : கடந்த 24 மணித்தியாலங்களில் 127 பேர் பலி

காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் ரஃபாவில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசாவின் தெற்கு பகுதிக்குள் தங்களது படைகள் எந்த சந்தர்ப்பத்திலும் நுழையக்கூடுமென தெரிவித்துள்ளது.

அத்துடன், காசா மீது இஸ்ரேல் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொண்ட தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் காசாவின் முக்கிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனையின் செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.