கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 11ஆவது நாளாக முன்னெடுப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக 11ஆவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

சுட்டெரிக்கும் வெயிலின் கொடூரத்திலும் நிழல் கூடாரம் அமைக்கத் தடை விதித்தும் தமது கோரிக்கைகளுக்கு நியாயம் கேட்டு குறித்த மக்கள் தம்மைக் காக்க பனைமட்டைகளைத் தாங்கி வீதியில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்கு முறைகளையும் கண்டித்தும் திட்டமிடப்பட்டு  பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும்  அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர்.