கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்
கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் புதிய ஆணையாளராக என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் நாளை முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், கல்முனை மாநகர ஆணையாளராக செயற்பட்ட ஏ.சீ. அன்சார் கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.