கருஞ்சீரகம் தண்ணீர் பயன்கள்

கருஞ்சீரகம் தண்ணீர் பயன்கள்

கருஞ்சீரகம் தண்ணீர் பயன்கள்

⚫வீட்டு சமையலறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களைக் கொண்ட ஏராளமான பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரக விதைகளானது பழங்காலம் முதலாக நாட்டு மருத்துவத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

⚫கருஞ்சீரகம் ஒரு மூலிகைத் தாவரம். இது தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.  இது ஆங்கிலத்தில் Black cumin என்று  அழைக்கப்படுகிறது. கருஞ்சீரகத்தில் தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் தோன்றும் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். கருஞ்சீரக விதை நீரைக் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் பல அற்புதங்கள் நிகழும். அந்தவகையில் கருஞ்சீரகம் தண்ணீர் பயன்களைப் பார்ப்போம்

🔸கருஞ்சீரக விதைகளில் ஆன்டி-பாக்டிரியல் பண்புகள் உள்ளன. கருஞ்சீரக நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அடிக்கடி குடிக்கும் போது, அது உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சித் தடுத்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும்.

🔸சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகும். உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பினை குறைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.

🔸காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரக தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

🔸கருஞ்சீரகம் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

🔸கருஞ்சீரக நீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

🔸வெறும் வயிற்றில் இதனை தினசரி குடித்துவந்தால், மூளையின் செயல்பாடு சிறந்த விதத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்கு இது சரியான தீர்வாக அமையும்.

கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

⚫கருஞ்சீரகத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது தொடர்ந்து எடுத்துக்கொண்டாலோ உடலுக்கு பல வியாதிகளையும் தருகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதனை கர்ப்பிணிகள், குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள், இரத்தம் ‌அழுத்தம்‌‌ உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.

கருஞ்சீரக நீரை எப்படி தயாரிப்பது?

⚫இரவு தூங்கும் முன், ஒரு டம்ளர் நீரில் 8-10 கருஞ்சீரக விதைகளை போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, வெறும்  வயிற்றில் குடிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்கலாம்.

கருஞ்சீரகம் தண்ணீர் பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்