கம்பஹா துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவருக்கு அச்சுறுத்தல்

கம்பஹா, அகரவிட்டவில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவருக்கு அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

ஒரு பெயர் தெரியாத நபரெருவர் காயமடைந்தவரிடம், “நீங்கள் இன்னும் இறக்கவில்லையா?” எனக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவருக்கு பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை கனேமுல்ல சஞ்சீவவுடன் தொடர்புடைய தம்மித சமரே நடத்தியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் தற்போது கம்பஹா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான சாமர சந்தருவன் என்ற கடையின் உரிமையாளர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24