கனரக வாகனத்துடன் மோதி இளைஞர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

கனரக வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

கெப்பட்டிபொலயில் இருந்து பொரலந்த நோக்கி வந்துகொண்டிருந்த பால் ஏற்றும் கொல்கலன் ஒன்று பொரலந்த பகுதியிலிருந்து சென்ற உந்துருளியுடன் வக்கி கும்புரா பகுதியில் வைத்து மோதியது.

இதில் உத்துருளியில் பயணித்த 23 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்தார்.

குறித்த விபத்துக்குள்ளான இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பால் கொள்கலன் சாரதி போககும்பரா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை போககும்புரா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.