கத்தோலிக்க திருச்சபையின் அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டின் சகல கத்தோலிக்கத் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடத்துவதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்துள்ளது.

மேலும் அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு சகல தேவாலயங்களிலும் மணியோசை எழுப்பப்படவுள்ளதுடன் செப வழிபாடுகளும் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்திலும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் உயிரிழந்தவர்களுக்கான விசேட நினைவு ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.