கடவுச்சீட்டு அலுவலகம் முன்பாக காசுக்காக வரிசை

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் காசுக்காக வரிசையில் நிற்கும் சிலரால் தூரதேசங்களில் இருந்து வரும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், காசுக்காக வரிசையில் நிற்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காசுக்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் அங்கு நின்றவர்களிடம் கெட்ட வார்த்தைகளை பேசி சண்டை பிடித்த நிலையில் பொலிஸார் குறித்த நபரை அங்கிருந்து அகற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தூரதேசங்களில் இருந்து கடவுச்சீட்டு பெறுவதற்காக வருவோர் இவ்வாறு காசுக்காக நிற்பவர்களால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக பாதிக்கப்பட்டோர் விசங்களை வெளியிட்டுள்ளனர்.