கடலில் நீராட சென்ற இளைஞன் மாயம்

எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் கடலில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

எகொடஉயன மீனவர் இல்லத்தில் வசிக்கும் சுபுன் சதுரங்க (வயது – 19) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞர் தொழில் வாய்ப்புக்காக நேர்காணலுக்கு சென்றிருந்ததாகவும் இதன்போது இரு இளைஞர்களுடன் இணைந்து நீராடச் சென்ற நிலையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன இளைஞனை தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் முன்னெடுத்த போதிலும், இது வரையிலும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்