கடலில் குளிக்க சென்ற வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகல்ல கடற்கரையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

71 வயதான குறித்த போலந்து நாட்டு பிரஜை பிரதேசவாசிகளால் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்தவர் தனது மனைவியுடன் கடலில் குளித்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேருவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.