கடலட்டைப் பண்ணை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்-

கடலட்டைப் பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பண்ணைகளுக்கான கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடற்றொழில் அமைச்சில் நேற்று நடைபெற்றது.

கடற்றொழில் திணைக்களம், நக்டா மற்றும் நாரா நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், அரச மற்றும் தனியார் கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடியளவு கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதுடன், மேலதிக தேவைகளுக்கு கடலில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு, வரையறைகளுடன் கூடிய பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.