கடற்படையினரின் இரு படகுகள் விபத்து : கடற்படை வீரர் ஒருவரை காணவில்லை

-யாழ் நிருபர்-

காரைநகர் கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இரண்டு கடற்படை படகுகளும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு படகு செல்வதை கடற்படையினர் அவதானித்தனர்.

இந்நிலையில் குறித்த படகினை இரண்டு கடற்படை படகுகளும் துரத்திக்கொண்டு சென்றவேளை இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காணாமல் போன கடற்படை வீரரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.