கஞ்சாவுடன் கைதான இருவர் பிணையில் விடுவிப்பு

-யாழ் நிருபர்-

நேற்று முன்தினம் கஞ்சாவுடன் கைதான இருவர் நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது தலா 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில்  விடுவிக்கப்பட்டனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் மேற்கு பகுதியில், 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இரண்டாயிரத்து நூறு மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் கோட்டையடி – பருத்தியடைப்பு பகுதியில் 48 வயதான சந்தேகநபர் ஒருவர் தொள்ளாயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று  ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் இருவரையும் ரூபா 50 ஆயிரம் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.