கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது

இன்று, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் 350 மில்லிமீட்டர் சட்டவிரோத கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

குறித்த நபர் தனது வீட்டில் வைத்து கசிப்பினை பாவனை செய்துகொண்டு இருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அக் கசிப்பினை உற்பத்தி செய்த நபரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.