ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் அரசியலை இன்னும் கை விடவில்லை!

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அரசியலை இன்னும் கைவிடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியலை விட்டு விலகாததினால் அவர்கள் வீடுகளில் நடைபெறும் கூட்டங்கள், கலந்துரையாடல்களை யாரும் பெரிய பிரச்சினையாக்கிக் கொள்ளத் தேவையில்லை என எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியை எடுத்துக் கொண்டால் அவர் அரசியலை விட்டு விலகவில்லை. சந்திரிக்காவும் அரசியலை கைவிடவில்லை.

அதனால் அவர்கள் வாழும் இடங்களில் கூட்டங்கள் நடைபெறுகின்றன. கலந்துரையாடல்கள் நடைபெறும். அதனால் அவர்களுக்கு அதற்காக வசதிகளை அந்த வீடுகளில் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இதை ஒரு பெரிய பிரச்சினையாக்கிக் கொள்ளத் தேவையில்லை. அமெரிக்கக் குடியரசில் 4 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த ஒருவருக்கு இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் டொலர் சம்பளத்துடன் ஒரு வீடு வழங்கப்படுகிறது. எமக்கு தெரிந்தவகையில் அவருக்கு எந்த போக வேண்டிய தேவையிருக்காது.” என்றார்.