ஒரே நாளில் இரண்டு விஹாரைகளில் திருட்டு

ஹாலி – எல ஸ்ரீபிம்பராம விஹாரை மற்றும் போகஹாமடித்த ஸ்ரீ ஜெதவனாராம விஹாரை ஆகிய விஹாரைகளில் ஒரே நாளில் இரண்டு விகாரைகளில் 97,000 ரூபா பெறுமதியான சொத்துக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ பிம்பராம ஆலயத்தின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் கதவு உடைக்கப்பட்டு 67,000 ரூபா பணம் , சிசிரிவி கமரா கட்மைப்பின் 25,000 ரூபா பெறுமதியான ரிவிஆர் என்பன திருடப்பட்டுள்ளன .

இதேவேளை , போகஹாமடித்த ஸ்ரீ ஜெதவனாராம ஆலயத்தில் இடதுபுற ஜன்னல் வழியாக நுழைந்த திருடர்கள் 5,000 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .