ஒரு வேளை உணவை குறைத்துள்ள இலங்கை மக்கள்

நாட்டில் மக்கள் உணவு உட்கொள்ளும் விகிதம் குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது

அதன்படி , நாட்டில் தற்போது 70 சதவீதமானோர் நாளாந்தம் ஒரு வேளை உணவை குறைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் மூன்று வேளைகளில், உணவை உட்கொண்டவர்கள் தற்போது இரண்டு வேளையும்,  இரண்டு வேளைகள் உணவை உட்கொண்டவர்கள் ஒரு வேளை மாத்திரம் உணவை உட்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.