ஒரு கோடி ரூபா பணம் மற்றும் துப்பாக்கியுடன் 8 இளைஞர்கள் கைது

ஒரு கோடி ரூபா பணம் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேக நபர்களான  8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 8 இளைஞர்களும் நேற்று வியாழக்கிழமை கொழும்பு ஜந்து நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம , கந்தானை பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களாவர்.

இவர்கள் குறித்த ஹோட்டலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை   ஆஜர்ப்படுத்தபடவுள்ளனர்.