இ.போ.ச ஊழியர் ஒருவரின் வீடு உடைத்து தங்க நகை திருட்டு

இ.போ.ச ஊழியர் ஒருவரின் வீடு உடைத்து தங்க நகை திருட்டு

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில் ஒன்பது பவுண் தங்க நகை களவாடப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில், அவர் நேற்று புதன்கிழமை காலை பணி நிமித்தமாக வெளியே சென்று,  பணி முடிந்து இரவு வீட்டுக்கு வந்த போது,  வீடு உடைத்து நகை களவாடப்பட்டு இருந்தமை தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இளவாவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை இளவாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்