‘ஒன்றிணைந்த இளமை ஹட்டனில் ஆரம்பம்
‘ஒன்றிணைந்த இளமை ஹட்டனில் ஆரம்பம்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் ஹட்டன் பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர், யுவதிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.ஆர். டவுனில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, ஊர்வலமாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தின் முன்பாக சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே, பசிக்கு நிறம் மதம் கிடையாது, விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும், போன் பல வாசகங்களை உள்ளடக்கிய சுவரொட்டிகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.