ஒன்றரை லீட்டர் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது
-யாழ் நிருபர்-
இன்று புதன்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலத்தில் ஒன்றரை லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.