ஐ போனும் ஐயாயிரம் பணமும் திருட்டு

அராலி செட்டியார் மடத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை ஐ போன் (I phone) ஒன்றும் ஐயாயிரம் ரூபா பணமும் திருட்டு போயுள்ளது.

இன்று பகல் குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு திறந்து மேற்குறிப்பிட்டவை திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.