ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

-பதுளை நிருபர்-

383 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் பண்டாரவளை நகரில் ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலக்கம் 211/A, மெதஹின்ன, கினிகம, பண்டாரவளையில் வசிக்கும் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது

ஹப்புத்தளை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்தபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் ஐஸ் போதைப் பொருட்களும் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப் படையினரால் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்