எல்ல மலையில் ஏறிய 22 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்ல மலையில் ஏறிய இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

மொரகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் எல்ல மலையில் ஏறிகொண்டிருக்கும் போது தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.