எரிவாயு கொள்வனவிற்காய் மைதானத்தில் நீண்ட வரிசை

காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக இன்று அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர்.

எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரம்  தெரிவித்துள்ள போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான விநியோகம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.

இதனால் மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியன வந்து சேரும் என எதிர்பார்த்து வீதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூவில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

 இதுவரை எரிபொருள் கொள்வனவுக்காக நின்ற பலர் உயிரிழந்துள்ள சம்பவமும் இலங்கையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேநேரம் மாளிகைக்காடு, ,சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் உள்ள மக்களின் வரிசையானது சுமார் 400 மீட்டர் தூரம் நீண்டு சென்றுள்ளது.

இருந்த போதும் இந்த இடத்திற்கு எரிவாயு காலை 8.00 மணிக்கு பின்னரே வந்து சேர்ந்ததாகவும்  காலையிலிருந்து தாம் வெளியிலில் காய்ந்துகொண்டிருப்பதாகவும் அங்குள்ள மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மட்டுமின்றி அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களையும் முன்வைத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.