எரிவாயுக்காக வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்

தெஹிவளையில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது விழுந்து மயங்கி விழுந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த தெஹிவளை பொலிஸார் குறித்த முதியவரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இன்று காலை முதல் தெஹிவளை காலி வீதி, வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு எடுக்க வந்த மக்களின் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Minnal24 FM