எரிபொருள் விநியோகத்திற்கு வரையறை
உடன் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விநியோகத்தை வரையறுக்க அரசு தீர்மானித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக இனிமேல் மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபா, முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபா, கார், வேன், ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.
பஸ்கள், லொறிகள், வர்த்தக வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு அமுலாகாதென அறிவிக்கப்பட்டுள்ளது.