எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

டீசல், பெற்றோல், விமானங்களுக்கான எரிபொருள் ஆகியவற்றை எந்தவிதமான தடையுமின்றி ஏப்ரல் மாதத்தில் விநியோகிக்க முடியுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது எரிபொருள் பாவனை 35 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்காக 1.2 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதோடு, வருடத்தின் எஞ்சியப் காலப்பகுதிக்கு எரிபொருள் இறக்குமதிக்காக 5 பில்லியன் ரூபாய் செலவிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடந்த வருடம் எரிபொருள் இறக்குமதிக்காக வெறும் 2.5 பில்லியன் ரூபாயே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.