எரிபொருளுக்காக காத்திருந்த 50 வயது நபர் உயிரிழப்பு
தங்கொட்டுவ- நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாள்களாக எரிபொருளுக்காக காத்திருந்த தனியார் பஸ் சாரதியொருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில், நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அத்துடன் தங்கொட்டுவ – தம்பரவில எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த 50 வயது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.