
எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல்
2,100 இற்கும் அதிகமான நிறுவனங்களிடம் அங்கீகாரமற்ற வகையில் எண்ணெய் தாங்கிகள் காணப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அனுமதி பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிக நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது 1250க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வணிகங்கள், தமது எரிபொருள் தேவைக்கான கட்டணத்தை அமெரிக்க டொலரில் செலுத்த வேண்டும்.
குறித்த வணிகங்கள், நிரப்பு நிலையங்களுக்கான விநியோகஸ்தரர்களிடமிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், வணிக நிறுவனங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது, என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.