என்னை விசாரணைக்கு உட்படுத்த முடியாது – டொனால்ட் ட்ரம்ப்

ஜனாதிபதியாக செயற்பட்ட தம்மை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தேர்தலை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் தமக்கு எதிரான விசாரணையை இடைநிறுத்துமாறு அவர் அமெரிக்க உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

எனினும், மூன்று கீழ் நீதிமன்ற நீதிபதிகள் உடன்படாத நிலையில் மற்றைய குடிமக்களைப் போலவே அவர் மீதும் வழக்குத் தொடரலாம் என தீர்ப்பளித்தனர்.

எவ்வாறாயினும், தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் மீது விசாரணை நடத்தக் கூடாதென அவரது சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் உச்சத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது ஒரு மாத கால குற்றவியல் விசாரணையை நடத்துவது, ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக பிரசாரம் செய்யும் டொனால்ட் டிரம்பின் திறனை தீவிரமாக சீர்குலைக்கும் எனவும் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜோர்ஜியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டொனால்ட் ட்ரம்ப் எதிர்கொண்டுள்ளார்.

எனினும், பல தடவைகளில் அவர் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.