எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கைஇ ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக திம்புலாகல, கந்தளாய், கிண்ணியா, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில மற்றும் தமன்கடுவ வெலிகந்தை ஆகிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.