எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.07 அமெரிக்க டொலராகவும் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.88 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.81 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.