ஊடக சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத இராஜாங்க அமைச்சர்
பிரதேசவாசிகள் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் எனது சின்ன மகள் முழுநாளும் சாப்பிடவே இல்லை, என சுதந்திர கட்சியின் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கண்ணீர் விட்டு அழுதார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இடையில் இவ்வாறு தெரிவித்து அழுதார்.
மேலும், தனது இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் எனவும் விவசாய இராஜாங்க அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.