உழவு இயந்திரங்கள் மாயம்
முல்லைத்தீவு – நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் இருந்து உழவு இயந்திரங்கள் இரண்டு மாயமாகியுள்ளன.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பறங்கியாற்றில் சட்டரீதியற்ற முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 25ஆம் திகதி நட்டாங்கண்டல் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சான்றுப் பொருள்களான இரு உழவு இயந்திரங்களே மாயமாகியுள்ளன.
25ஆம் திகதி ஏற்பட்டிருந்த மின்சாரத் தடையைப் பயன்படுத்தி நல்லிரவில் இப்பொருள்கள் திருடப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் வினவியபோது “தவறொன்று நடந்துள்ளது“ என நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.