உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த எதிர்பார்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அக்குரனைப் பகுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, புதிய வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான நாடாளுமன்ற அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.