உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் வெட்டிக் கொலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 38 வயதுடைய நபர் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்குளியில் வைத்து வெட்டி இனம் தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளியைச் சேர்ந்த மொஹமட் பதுர்தீன் மொஹமட் ஹர்னாஸ் (வயது-38) என்ற நபரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் வந்த இருவர் குறித்த நபரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.