உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு அரசியல்வாதிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எனினும் பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை, எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.