உணவு உண்ணச்சென்ற 10 பேர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலையில் உணவகம் ஒன்றில் உணவு உண்பதற்காக சென்ற 10 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடையின் ஒன்பது பெண் ஊழியர்களும் ஒரு ஆண் ஊழியருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள தரை தளத்தில் உணவு உண்பதற்காக சென்ற ஊழியர்கள் ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகையை சுவாசித்தமையினால் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.